தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை தொடர்ந்து மறைந்த பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் வாழ்க்கையும் திரைப்படமாகிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய நடிகையாக வலம் வந்த நடிகை விஜயநிர்மலா, தமிழில் எங்க வீட்டுப் பெண், சித்தி, பந்தயம், பணமா பாசமா? நீலகிரி எக்ஸ்பிரஸ், என் அண்ணன், ஞான ஒளி என சுமார் 250 படங்களில் நடித்துள்ள விஜய நிர்மலா, 44 படங்களையும் இயக்கியும் உள்ளார்.அதிக படங்களை இயக்கிய ஒரே பெண் இயக்குனர் என்பதால் கின்னஸ் சாதனை புத்தகத்திழும் இடம் பிடித்தார்.இந்நிலையில்,விஜயநிர்மலாவின் பயோபிக்கை படமாக்க இவரது மகனும் இயக்குனருமான நரேஷ் கிருஷ்ணா முடிவு செய்துள்ளார்.இந்தப் படத்தில், விஜய நிர்மலா கேரக்டரில் நடிக்க, மகாநதி படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் சிலரிடம் நரேஷ் கிருஷ்ணாபேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இனிமேல் பயோபிக் படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை என ஏற்கனவே கூறியுள்ள கீர்த்தி சுரேஷ் விஜயநிர்மலா பயோபிக்கில் நடிப்பது சந்தேகமே என்கிறது கீர்த்தி சுரேஷ் வட்டாரம். கீர்த்தி சுரேஷ் தற்போது தனது உடல் எடையை ஜீரோ சைஸ் அளவுக்கு மிகவும் குறைத்து இந்திப்படங்களில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.