லாக் டவுன் காரணமாக ஒட்டுமொத்தமாகஅனைத்து துறைகளும் முடங்கியுள்ள நிலையில், நடிகை ஆண்ட்ரியா சற்று வித்தியாசமாக தான் நடித்த குறும்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ’லாக் டவுன்’ என்ற பெயர் கொண்ட இந்த குறும்படம் ஐபோனில் எடுக்கப்பட்டுள்ளது.நடிகர் ஆதவ் கண்ணதாசன் இயக்கியுள்ளார்.நிதின்ராம் ஒளிப்பதிவில் கார்த்திக் படத்தொகுப்பில் சிவா சவுண்ட் எபெக்ட்ஸில் உருவாகியுள்ளது.