பாலிவுட் நடிகைக்கு மகள் செய்து வைக்கும் மறுமணம்.!

இங்கே காதல் வென்றதா ,காமம் வென்றதா என்றால் இரண்டுமே வென்றது என்றுதான் சொல்ல வேண்டும்.!
பூஜா பேடி .ஒரு காலத்தில் தலைப்புச்செய்தி நாயகியரில் இவரும் ஒருவர்.
கபீர் பேடி -புரோதிமா பேடியின் மகளான இவர் ஆணுறை விளம்பர படத்தில் துணிந்து நடித்தார் .பாலிவுட் நடிகை என்றாலும் நடித்த படங்களின் எண்ணிக்கை இரு கைகளில் அடங்கிவிடும்.
சின்னத்திரையிலும் அவ்வளவாக இடமில்லை என்றாலும் செய்திகளில் இடம் பெறுவதில் முன்னணியில் இருந்தார்.
பர்ஹான் இப்ராகிம் என்பவரை மணந்து ஆலயா ,உமர் இப்ராகிம் என இரு பிள்ளைகளை பெற்றார். ஆலயா பாலிவுட் நடிகை ஆனார் .
2004 -ல் பர்ஹானுக்கும் இவருக்கும் வாழ்க்கையில் கசப்பு. மனமொத்து பிரிந்தனர் .
ஆண் என்பதை காட்டிக்கொள்ள பர்ஹான் இன்னொரு திருமணம் செய்து கொண்டார்.
காதலும் காமமும் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை?
ஆண் மறுமணம் செய்துகொள்கிறபோது பெண் மறுமணம் செய்து கொள்ளமுடியாதா?
அப்படியென்ன ஆகிவிட்டது வயது ? 50 தானே?
“அம்மா நீங்களும் மறுமணம் செய்து கொள்ளுங்க”என்று பெற்றெடுத்த பிள்ளைகளே சொல்லும்போது தனக்கு ஒரு துணையைத் தேடிக்கொள்வதுதானே அழகு.!
தனக்குப் பிடித்த துணையைத் தேடினார்.
சேர்த்து வைத்திருக்கிற சொத்துக்கு சேதாரமாக வந்து விடக்கூடாதல்லவா!
தேடல் அவரது பள்ளிக்கூடக் காலத்து நண்பரை பள்ளியறையின் பஞ்சணைக்கு துணையாக்கி விட்டது.
வானில் பலூனில் பறந்து கொண்டிருந்தபோது பள்ளித்தோழர் மானெக் அவரது காதலை முன் மொழிந்தார்.
உதடுகளில் முத்தமிட்டு ஏற்றுக்கொண்டார் பூஜாபேடி.
விரைவில் இருவருக்கும் திருமணம்.!