இந்த கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த லாக்டவுன் நடிகர் சாந்தனுவுக்குள் ஒளிந்திருந்த அற்புதமான திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.தனது தந்தை பாக்யராஜ் வழியை பின்பற்றி,நடிப்பு இயக்கம் இரண்டையும் கையில் எடுத்து,’கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ என்ற 7 நிமிட அழகான குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
‘கொரோனா வந்தாலும் வந்தது. இவர்களுக்கு வேலை செஞ்சே இடுப்பு ஒடிஞ்சது தான் மிச்சம்’ என பல குடும்பத்தலைவிகளும் புலம்ப, விளையாட்டு, படம் பார்ப்பது என கணவன்மார் பலரும் தங்கள் பொழுதை ஜாலியாக கழித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்களும், இந்த நேரத்தில் தங்கள் குடும்பத்தினருக்கு குறிப்பாக ஓய்வின்றி உழைக்கும் மனைவிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் என்ற சூப்பர் மெசேஜுடன் ,தந்தை பாக்யராஜின் வழியில் குறும்பான நகைச்சுவை கலந்து இக்குறும்படத்தை தனது மனைவியுடன் வீட்டிலேயே நடித்து, இயக்கி, எடிட்டும் செய்து வெளியிட்டுள்ளார்.