நடிகர் பிருத்வி ராஜ்.மலையாளப் படமான ‘ஆடுஜீவிதம்’ படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்று இருந்தார்.இந்நிலையில், கொரோனா காரணமாக உலகம் முழுழுவதும் ஊரட ங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்ட நிலையில், பிரித்விராஜ் உள்பட 58 பேர் கொண்ட படக்குழு இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வந்தது.
இது பற்றி நடிகர் பிருத்திவி ராஜ் அடிக்கடிசமூக வலைதளத்தில் தானும் படக்குழுவினரும் படும் துன்பங்களை பதிவிட்டு வந்தார். அவரின் மனைவியும் அவ்வப்போது உருக்கமான சில பதிவுகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் பிரிதிவிராஜ் நடித்து வந்த காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், விமான போக்குவரத்து இல்லாததால் வேறு வழியின்றி சரியான உணவு கூட கிடைக்காமல் தவித்து வந்தார் .
இதற்கிடையில் அங்கு சில தளர்வுகள் தளர்த்தப்பட்டு படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.இந்நிலையில் .ஜோர்டான் பாலைவனத்தில்நடந்து வந்த இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது முடிவடைத்துள்ளது. எனவே இந்திய தூதரகம் உதவியால் நடிகர் பிருத்வி ராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் விரைவில் சிறப்பு விமானம் வீடு திரும்புவார் எனத்தெரிகிறது.