தாடிக்காரன் வர்றார் ……பிரிதிவிராஜ்,மனைவி, மகள் நெகிழ்ச்சி!

ஜோர்டானில் சிக்கித் தவித்த ‘ஆடுஜீவிதம்’ படக்குழு, கிட்டத்தட்ட 82 நாட்களுக்கு பிறகு இன்று சிறப்புவிமானம் மூலம் இந்தியா திரும்புகிறது .’ஆடுஜீவிதம்’ படத்தின் படப்பிடிப்பு ஜோர்டானில் முடிந்துவிட்டதாக அப்படத்தின்நாயகன்  நடிகர் பிருத்விராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். மொத்தப் படக்குழுவும் எடுத்த செல்பி போட்டோவையும் அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவர் மனைவி சுப்ர்யா, இனி எல்லாரும் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்று கூறி இருந்தனர்.இந்நிலையில் ஜோர்டானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானத்தை இயக்கியுள்ளது. இந்த விமானம் இன்று டெல்லி திரும்புகிறது. இதில் நடிகர் பிருத்விராஜ்,இயக்குனர் பிளஸ்சி உள்ளிட்ட 58 பேர் கொண்ட படக்குழுவினரும் அழைத்து வரப்படுகின்றனர் .பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து கொச்சி செல்கின்றனர். பின்னர் கொச்சியில் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டு 14 நாள் தனிமைப்படுத்தபட உள்ளனர். அவர்கள் குடும்பத்தினரை சந்திக்கின்றனர்.இதுபற்றி பிருதிவிராஜின் மனைவி சுப்ரியா மேனன் பிருத்விராஜ் இன்ஸ்டாகிராமிற்கு தங்கள் மகள் ஆலங்கிருதாவின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.அதில் ஆலங்கிருதா,கரும்பலகை ஒன்றில், ‘எங்க அப்பா வந்துகிட்டிருக்காங்க’ # சூன் # டாடா கோமிங்ஹோம் # தாதிகரன் (தாடிக்காரன் )” என்று குறிப்பிட்டுள்ளார். அம்மா,மகள் இருவரும் பிரிதிவிராஜை செல்லமாக ‘தாடிக்காரன்’ என குறிப்பிட்டுள்ளது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

https://www.instagram.com/p/CAayO8jJvEU/?utm_source=ig_web_copy_link