பாலிவுட் நடிகர்கள் இர்பான் கான், ரிஷிகபூர் ஆகியோர் புற்றுநோய் காரணமாக .அடுத்தடுத்து மரணமடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் தள்ளியது.
இந்நிலையில்,பாலிவுட் இளம் நடிகர் மோகித் பஹேல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் மதுரா சென்று . அங்கு தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்நிலையில் மோகித் பஹேல் நேற்று காலை திடீரென உயிரிழந்தார்.
இவருக்கு வயது 26. இவர் சல்மான் கான் நடிப்பில் வெளியான ரெடி மற்றும் காலி காலி சோர் ஹே உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.மோகித் பஹேலின் மரணம் பாலிவுட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மோஹித் மறைவுக்கு நடிகை பரினீதி சோப்ரா, ‘நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா உள்பட பலர் தங்களது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.