குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் அந்த காலத்தில் கடவுள்களின் பெயர்களுக்கு முதலிடம் கொடுத்தனர். ஒருவரது பெயர் கடவுளர் . என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் .பிறகு கிராமிய தெய்வங்களது பெயர்களான மாடன் ,கருப்பு ,காத்தான் என பெயர்களை வைத்தார்கள். பெரும்பாலும் கிராமங்களில் இத்தகைய பெயர்களை இன்றும் கேட்கலாம்.
பகுத்தறிவாளர்கள் தங்களின் பெயர்களை தமிழ்விரும்பி ,அன்பழகன் ,ஆசைத்தம்பி ,சிற்றரசு ,திருமாவளவன் ,வெற்றிச்செல்வன் ,வேங்கைமைந்தன் என்றெல்லாம் உணர்வு கலந்து வைத்துக் கொண்டார்கள்.,
நாளடைவில் நாகரீகம் வளர வளர புதுமையாக பெயர் வைக்கிறேன் என சொல்லி சமஸ்கிருதப் பெயர்களை வைத்தார்கள். அதன் பொருளே வேறு விதமாக இருந்தது. உதாரணத்துக்கு ப்ருத்வி என்றால் மண்ணாங்கட்டி , தர்ஷினி என்றால் அமாவாசை ,மகிஷா என்றால் எருமை ,யாஷிகா என்றால் பிச்சைக்காரி ,கோபிகா என்றால் பால்காரி என்றெல்லாம்அந்த பெயர்களுக்கு அர்த்தம் சொல்லிக்கொண்டே போனார் ஒரு நண்பர்.
அர்த்தமே தெரியாமல் பெயர் வைப்பது பேஷன் என்றாகி விட்டது.என்ன பண்ணுவது?
ஆனால் எல்லாவற்றையும் தூக்கி அடிக்கிற மாதிரி கனடாவில் பிரபல பாடகி கிரீம்ஸ் ,இவரது கணவர் இவான் மஸ்க் இருவரும் இணைந்து தங்களுடைய முதல் ஆன் குழந்தைக்கு உலகத்திலேயே இல்லாத வகையில் பெயர் வைத்தனர்
கனடா அரசு அந்த பெயரை ஏற்க முடியாது என்று சொல்லி விட்டது.
அப்படி என்னய்யா அந்த பெயர் அவ்வளவு அதிசயமான வித்தியாசமான பெயர் என கேட்கிறீர்களா?
“X AE A -12 musk” இதாங்க அந்த பெயர்!
யோவ் என்னய்யா இப்படி பே ரு வெச்சிருக்கே .எப்படிய்யா கூப்பிடுறது என்று கேட்டால் அவர்கள் என்னவோ சொல்கிறார்கள். கனடா அரசு வேறு பெயரை வைக்கச் சொல்லி இருக்கிறது
அட சண்டாளயங்களா ,கூப்பிடுறதுக்குத் தானேய்யா பேரு ,இப்படி குண்டக்க மண்டக்க வச்சா எப்படி கூப்பிடுறது?