விழித்திரு என்ற திரைப்படம் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். தற்பொழுது மேலும் சில தென்னிந்திய மொழி படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
கொரோனா பாதிப்பாலும், தொடர் ஊரடங்கினாலும் , வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மேடை மெல்லிசை கலைஞர்களின் நிலையைக் கண்டும், அவர்கள் எதிர்காலத்தை எண்ணியும் வருந்திய சத்யன் மகாலிங்கம், அவர்களுக்காக முகநூலில் கடந்த 55 நாட்களாக இடைவிடாது தினமும் இரவு 7 மணி முதல் பாடி வருகிறார்.
அண்ணா நகர் விமலம் மெஸ், சிங்கப்பூர் அப்பலோ செல்லப்பாஸ் மற்றும் சிங்கப்பூர் பனானா லீப் ரெஸ்டாரன்ட், நலிந்த கலைஞர்களுக்கான சத்யன் மகாலிங்கம் செய்யும் நிகழ்ச்சிகளுக்கு தானாகவே முன் வந்து முக்கிய ஆதரவாளர்களாக ஆகினர்.
55 நாட்களை கடந்த சத்யனின் இந்த நிதி திரட்டும் விடாமுயற்சியின் இறுதிக்கட்டமாக மே 30 ம் தேதி ( இன்று ) மாலை 7 மணி முதல், 31 ம் தேதி மாலை 7 மணி வரை, 24 மணி நேரம் தொடர்ச்சியாக தனது முகநூல் நேரலையில் பாடி மேடை மெல்லிசை கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ முடிவெடுத்துள்ளார்.