பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்!

தமிழ்த்திரையுலகில் மூத்த ஒளிப்பதிவாளரும் ,இயக்குனர் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பருமான கண்ணன்(வயது 69.) உடல்நலகுறைவு காரணமாக தனியார் மருத்துவ மனையில் சிகிசசை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் சிகிசசை பலனின்றி மரணம் அடைந்தார்.

பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் அவருக்கு மிக நெருங்கிய நண்பராகவும் இருந்து வந்தார்.இந்நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிசசைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சைசெய்யப்பட்டது.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைந்த பழம்பெரும் இயக்குனர் பீம்சிங்கின் மகன், இவரது சகோதரர் பிரபல எடிட்டர் லெனின் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் கண்ணனின் உடல்,சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.சிறந்த ஒளிப்பதிவிற்காக கண்ணன் பல விருதுகளை பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் 2 முறை பெற்றுள்ளார். இவர் திரையுலகினரால் பாரதிராஜாவின் கண்கள் என்றும் அழைக்கப்பட்டார்.