யோகா தினம் .
ஒவ்வொரு வருடமும் சர்வதேச யோகா தினத்தன்று பொதுமக்கள் பொது இடங்களில் கூடி யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
யோகா தினத்துக்காக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால், கொரோனா பாதித்துள்ளதால், பொது இடங்களில் பலர் கூடி யோகா செய்ய முடியாத நிலை!
இந்நிலையில் சில நடிகர், நடிகைகள் தாங்கள் செய்துள்ள யோகா வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
பாலிவுட் நடிகை அடா சர்மா, அவர் செய்யும் யோகாவை வீடியோவாகப் பதிவு செய்து பதிவிட்டுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் கைப்பிடி சுவற்றில் அமர்ந்தபடி, உடலை அப்படி வளைத்து யோகா செய்கிறார்.அவர் யோகா செய்வதை அவர் வீட்டு பூனை ஒன்றும், ஒரு காகமும் பார்த்தபடி இருக்கிறது.
கேப்ஷனாக, நீங்கள் யோகா செய்துவீட்டிர்களா? என்று கேட்டுள்ளார். கூடவே, நீங்கள் உங்கள் வீட்டிலேயே முயற்சி செய்யலாம். உங்களுக்கு சர்க்கஸ் பயிற்சி இல்லை என்றால், உலகத்தின் உச்சியில் இருந்து யோகா செய்ய முயற்சிக்க வேண்டாம் என்றும் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
அபாயகரமான கைப்பிடி சுவற்றில் யோகாவா? என பலரும் அடா சர்மாவைவிமர்சித்து வருகின்றனர் இவ்வீடியோ வைரலாக பரவி வருகிறது.