பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருடைய தற்கொலைக்கு பாலிவுட் பிரமுகர்கள் சிலர் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என்றும், கரன்ஜோகர், சல்மான் கான், சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில்,நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலைக்கு காரணம் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி தான் என பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவர் பீகார் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து ஏற்கனவே நடிகை ரியா சக்ரவர்த்தியிடம் மும்பை போலீசார் பலமணி நேரம் விசாரணை செய்த நிலையில், தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது