இந்தித் திரையுலகின்பிரபல பின்னணி பாடகர் சோனு நிகம்.
தமிழ் தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். இவர் தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில், பாலிவுட்டில் மியூசிக் மாபியா செயல்படுகிறது என்றும்,டி .சீரிஸ் நிறுவனத்தையும் அதன் உரிமையாளரம் படத்தயாரிப்பாளருமான பூஷன் குமாரையும் கடுமையாகச் சாடியிருந்தார்.
‘மரியாதையோடு அழைக்கும் தகுதியை இழந்துவிட்டீர்கள். தவறான நபரோடு மோதி இருக்கிறீர்கள். புரிந்துகொள்ளுங்கள்.எனக்காக ஆல்பம் பதிவு செய்யுங்கள் என்று என் வீட்டுக்கு வந்தது, ஸ்மிதா தாக்கரேவை அறிமுகம் செய்து வைக்கும்படி கெஞ்சியது எல்லாம் நினைவில் இருக்கிறதா? என்னுடன் மோத வேண்டாம். எச்சரிக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாடகி மோனாலி தாக்கூர் கூறும்போது, சோனு நிகம் சொன்னது உண்மைதான். இசைத்துறையில் மாபியா போல செயல்படுகிறார்கள். பலருக்கு அவர்களுக்கான பாக்கி இன்னும் கிடைக்கவில்லை. நான் மன அழுத்தம் காரணமாக என்னை இசை துறையில் இருந்து விலக்கிக்கொண்டேன். இனி பாடல் வாய்ப்பை பெற முயற்சிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
, பூஷன்குமாரின் மனைவியும் நடிகையுமான திவ்யா கோஷ்லா, தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
“தங்களது ஆணித்தரமான பிரச்சாரங்களால் பொய்களையும் வஞ்சங்களையும் விற்கக் கூடியவர்களாக இருப்பதைக் கூட இப்போது பார்க்க முடிகிறது.இது போன்றவர்களுக்கு மக்களின் மனதுடன் எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியும். கடவுள் நம் உலகை காக்கட்டும். சோனுஜி, இசைத்துறையில் உங்களுக்கு முதல் வெற்றியை கொடுத்ததும் இப்போது வரை உங்களுக்கு உதவிக் கொண்டிருப்பதும் டி-சீரிஸ் நிறுவனம்தான். பூஷனுடன் உங்களுக்கு பிரச்னை இருந்தால் அதை ஏன் முன்பே சொல்லவில்லை?இப்போது விளம்பரத்துக்காக ஏன் இப்படி செய்கிறீர்கள்? நானே, உங்கள் தந்தையின் பல இசை வீடியோக்களை இயக்கி இருக்கிறேன். அதற்கு அவர் எப்போதும் நன்றி உடையவராக இருக்கிறார். ஆனால், சிலர் நன்றிகெட்டவர்களாக இருக்கிறார்கள். என பதிவிட்டுள்ளார்.
இந்தப் பிரச்னை பாலிவுட்டில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.