கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம், கடந்த மே 1ம் தேதியே வெளியாக வேண்டிய நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த படத்தின் ரிலீஸையும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெண்குயின் திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியிடப்பட்ட நிலையில், தனுஷின் ஜகமே தந்திரம் படத்தையும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாள் இம்மாதல் 28 ந்தேதி வருகிறது.அவரது பிறந்த நாளை இம்மாதம் முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாட முடிவு செய்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் நேற்று மாலை (30 ம் தேதி) 5 மணிக்கு ஜகமே தந்திரம் அப்டேட் வருகிறது என அறிவிக்க, தனுஷ் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில்,இன்று காலை 9 மணிக்கு ஜகமே தந்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 28 ந்தேதிதனுஷ் பிறந்தநாள் அன்று வெளியாகும் என அதன் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது.இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக சஷிகாந்த் தயாரித்துள்ளார்.




