இயக்குநர் ஏ எல் .விஜய்யுடன் மூன்றாண்டு ‘தாம்பத்யம்’நடத்தி சுபம் போட்டு விட்டு டைவர்ஸ் வாங்கிக்கொண்டு போனவர் நடிகை அமலாபால். புண்ணியவான் விஜய் டாக்டர் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு மறு வருடமே ஆண் மகவுக்கு அப்பாவாகி விட்டார்.
அமலாபால் வதந்திகளுக்கு தீனி போட்டபடி வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கிறார். பாலிவுட் போனார் ,டோலிவுட் போனார் என்கிற செய்திகளும் அவரது இன்ஸ்டராகிராம் போட்டோக்களும் அவ்வப்போது கண்களை நிறைவு செய்து கொண்டிருக்கிறது.
பாலிவுட் பாடகர் பவ்நிந்தர் சிங்குடன் காதல் என ஒரு நாள் செய்தியாகியது.சில நாட்களில் அவரையே மணந்து கொண்டார் என லிப்லாக் படமுடன் வேறு செய்தி.
சிலநாட்களில் அதற்கு மறுப்பு. அது உண்மையான படம் இல்லை என்பதாக.!
தற்போது கைக்கடிகாரத்துக்கு மாடல் செய்துள்ள அமலாபால் “அயம் இன் லவ் “என்பதாக பதிவு செய்திருக்கிறார்.
அந்த பதிவு கடிகாரத்துக்கானதா ,காதலருக்கானதா?
தெரியாது மக்களே!