அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து வரும் புதிய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் சிவகார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சற்று முன்னர் இப்படத்திற்கு ‘ரெமோ ‘என்று தலைப்பு வைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே அந்நியன் படத்தில் விக்ரமின்(multiple personality disorder) கேரக்டருக்கு இயக்குனர் ஷங்கர் இப்பெயரை வைத்திருந்தது குறிப்பிடதக்கது.