ராஜா ராணி படத்திற்குப் பின் சொல்லிக் கொள்ளும் படி படங்கள் எதுவும் ஆர்யாவுக்குஅமையாததால் கவலையில் மூழ்கிய ஆர்யா தற்போது, தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் விதமாக தற்போது அழுத்தமான வேடங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார். அதன்படி மஞ்சப்பை இயக்குனர் ராகவன் இயக்கம் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஆர்யா ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.கதைப்படி ஆர்யா, இதில் பழங்குடி இனத்தவராக நடிக்கப் போகிறாராம். மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அதிரப்பள்ளி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நடைபெறவுள்ளது. கும்கி பாணியிலான இந்தப் படத்திற்கு , யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம்… விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.