கொரோனா ஊரடங்கால் சினிமா உள்பட பல்வேறு தொழில்களும் முடங்கி போயுள்ளதால் கடும் நெருக்கடிக்கு ஆளான பலரும் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இந்நிலையில் கொரோனா ஊரடங்கு பிரபல கன்னட நடிகர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் ஸ்ரீநாத் வசிஸ்தாவை ஒரு குடியிருப்பின் வாட்ச்மேனாக மாற்றிவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தனது குடியிருப்பின் அனைத்து வாட்ச்மேன்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், தனது குடியிருப்பைப் பாதுகாக்க தானே வாட்ச்மேனாக மாறி விட்டாராம் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் குடியிருப்பின் ஒரு வாயில் அருகே நின்று, பிபிஇ கிட்டில் கையில் ஒரு வெப்ப ஸ்கேனருடன் தோன்றும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் .
கொரோனா தன்னை அடுக்குமாடி குடியிருப்பின் வாட்ச்மேனாக மாற்றிவிட்டது குறித்து அவர் கூறியுள்ளதாவது, “நான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வாட்ச்மேன்களில் ஒருவருக்கு ‘கொரோனா பாசிட்டிவ்’ என்பதால் மற்ற மூன்று வாட்ச்மேன்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்,
குடியிருப்பின் அசோசியேஷன் அடுத்த 10 நாட்களுக்கு ரக்ஷக் (பாதுகாப்பு) பணிகளைச் செய்ய உதவுமாறு குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டது, இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என் கடமை, வாசலில் உட்கார்ந்து, நேற்று இரவு என் மகன் ருத்விக் வசிஸ்தா பணியில் இருந்தார், இப்போது நான், இந்த அற்புதமான சமூக சேவையைச் செய்ததில் ஒரு புதிய அனுபவமும் மகிழ்ச்சியும் அடைகிறேன். “சர்வஜேனா சுகினோ பவந்து”.என பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் ஸ்ரீநாத் வசிஸ்தா நடிப்பில் உருவாகியுள்ள ஹவாலா திரைப்படம் வெளியீட்டுக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.