தமிழில் ‘மிருகம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. தொடர்ந்து ஈரம்,அய்யனார், ஆடுபுலி,அரவான்,’யாகாவராயினும் நாகாக்க’, ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் தற்போது ‘க்ளாப்’என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிக்கி கல்ராணியுடன் மரகதநாணயம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். அந்த படப்பிடிப்பின் போதே இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் விரைவில் இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து இருவரும் மவுனம் காத்து வந்தனர். இந்நிலையில்,இவர்களது காதலை உறுதி படுத்துவது போல், கடந்த 14-ம் தேதி நடிகர் ஆதியின் தந்தை ரவிராஜின் பிறந்தநாளை ஆதி உள்ளிட்ட குடும்பத்தினர் வீட்டிலேயே கொண்டாடியுள்ளனர்.
ரவிராஜா தெலுங்கில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியதோடு, தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.கொரோனா அச்சுறுத்தலால் யாரையும் அழைக்காமல் வீட்டில் மிகவும் எளிமையாக , நடந்த இந்த நிகழ்வில் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை நடிகர் ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் விழா நாயகன் ஆதியின் தந்தை இரண்டு கையிலும் சரக்கு பாட்டில்களுடன் போஸ் கொடுத்திருப்பது தான் ஹைலைட். இப்புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.