சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது சென்னை மாநகர போலீஸ் போலீஸ் கமிஷனர்அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா திடீரென புகார் அளித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தான் இசைஞானி இளையராஜா பல ஆண்டு காலமாக இசையமைத்து வருகிறாா். இளையராஜாவின் அடையாளமாக் விளங்கிய பிரசாத் ஸ்டுடியோவில்அவரது அபார இசைத் திறமையை பாராட்டும் விதமாக உரிமையாளர் எல்.வி.பிரசாத் அவருக்கென தனிரெக்கார்டிங் தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தாா். இந்நிலையில் தற்போது தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அங்கே அமைந்துள்ள பல அரங்குகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்து விட்டு,நவீன வணிக வளாகம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இளையராஜா அந்த இடத்தில் தொடர்ந்து தங்கி வருவதையும், பணியாற்றுவதையும் எல்.வி. பிரசாத்தின் வாரிசுகள் விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இளையராஜாவின் ரெக்கார்டிங் தியேட்டரை இடித்துவிட்டு, அந்த இடத்தில் சினிமா தியேட்டர் ஒன்றை கட்டவும் அவர்கள் முயற்சி செய்து வருவதாக, இளையராஜா அவர்கள் மீது வழக்கு ஒன்றையும் தொடுத்துள்ளார்.இந்நிலையில், தற்போது பிரசாத் ஸ்டூடியோவின் உரிமையாளர் சாய் பிரசாத் மீது, சென்னை மாநகரக் காவல் நிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தனது ஸ்டூடியோவில் இருந்த இசைக் குறிப்புகளை சாய் பிரசாத் சேதப்படுத்தியுள்ளார் என இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில்,தற்காலிகமாக தனது வீட்டில் இசைப்பணிகளை கவனித்து வரும் இளையராஜா, கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். ப்ரிவ்யூ தியேட்டரை சொந்தமாக வாங்கி உள்ளதாகவும், அதனை ரெக்கார்டிங் தியேட்டராக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.