யார் தூண்டிவிட்டார்களோ,தெரியாது.
பாரதிராஜாவை முதல்வரை சந்திக்கும் அளவுக்கு உசுப்பியிருந்தது.
நாளை ஆடி 18 ஆம் நாளன்று புதிய தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் செயல்படுகிற அசோசியேஷன் என்கிற பெயரில் ஒரு சங்கம் தொடங்கப்படுவதாக இருந்தது. இதுவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் கடந்த பத்து நாட்களாக அதற்கான வேளைகளில் பாரதிராஜா இறங்கியிருந்தார் .
ஆனால் என்ன நடந்ததோ தெரியாது.அந்த சங்கத்தை இப்போது தொடங்க வேண்டாம் .கொரானா முடியட்டும் .சங்கத்துக்கான தேர்தல் நடந்து முடியட்டும் என்று சொல்லிவிட்டாராம். ஆக தற்போதைக்கு அந்த சங்கம் இல்லை என்றாகிவிட்டது. இந்த புதிய சங்கத்துக்காக தனஞ்செயன் ,சுரேஷ்காமாட்சி ஆகிய இருவரும்தான் கடுமையாக பாடுபட்டார்கள் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா புதிய தயாரிப்பாளர் சங்கம் குறித்து பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பாரதிராஜா கூறியுள்ளதாவது,
“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பெரு மக்களுக்கு..
அன்பான வணக்கம்
நமது சங்கம் பல்வேறு நபர்களால், பல்வேறு காரணங்களால் செயலற்றத் தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். திரைப்படங்கள் எந்த விதப் பிரச்சினையின்றி தியேட்டரில் வெளிவர, தயாரிப்பாளர் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பலரது கோரிக்கை,அதற்கு சுய நலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம் . அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்தப் பிறகே சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனை கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படவுள்ளது
நன்றி.
அன்புடன்
பாரதிராஜா
01:08:2020
சென்னை