மறைந்த நடிகரின் குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்திய குழந்தை.!

கண்ணா லட்டு தின்ன ஆசையா,வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 உள்ளிட்ட  படங்களில் நடித்துள்ளஇளம் நடிகர் டாக்டர்  சேதுராமன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

சேதுராமன்-உமையாள்  தம்பதிக்கு  ஒன்றரை வயதில் சகானா என்ற ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கர்ப்பிணியான இளம் மனைவியையும் குழந்தையையும் விட்டு சேது அகால மரணமடைந்தது பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில்நடிகர் சேதுவின் மனைவி உமையாளுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.மறைந்த நடிகர் சேது ராமனே மீண்டும் பிறந்து வந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.