பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகை சபா கமார்.
மறைந்த நடிகர் இர்ஃபான் கானுடன் ‘இந்தி மீடியம்” என்கிற திரைப்படத்திலும் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் நடிகை சபா கமார் மற்றும் பாடகர் பிலால் சயீத் மீது பாகிஸ்தான் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. சமீபத்தில், சபா கமார் நடித்த பாடல் வீடியோ ஒன்றில், ஒரு சிறிய காட்சி மசூதிக்குள் படமாக்கப்பட்டு இருந்தது,
அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கடும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது..
இதையடுத்து மசூதியின் புனிதத்தை கலங்கப்படுத்தியதாக சபா கமார் மற்றும் படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அந்த பாடலில் சர்ச்சையான குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருக்கிறது.