உலகையே தனது கோரமுகம் கட்டி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், நடிகர்கள் என்றால் மட்டும் விட்டு விடுமா என்ன?பலரையும் ஆட்டி படைத்து வருகிறது ஹாலி வுட், பாலிவுட் ,கோலிவுட் என ஒட்டுமொத்த உலக நடிகர்,நடிகைகளையே பதம் பார்த்து விட்ட இந்த கொரோனா, சமீபத்தில், நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்,சுமலதா, ஐஸ்வர்யா அர்ஜுன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர் விஷால்,நடிகை நிக்கி கல்ராணி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களையும் பாடாய் படுத்தி இருக்கிறது. மேலும் பல நடிகர்,நடிகைகள் கொரோனா அச்சத்திலேயே தடுப்பூசியின் வரவை எதிர்பார்த்து வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.பல நடிகர்,நடிகைகள் ரகசியமாக வீட்டிலேயே தனிமை படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,தமிழில், பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் உட்பட பல படங்களில் நடித்த ஜெனிலியா தானும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக வெளிப்படையாக தனது வலைதளத்தில் ,”கடந்த 3 வாரங்களுக்கு முன் சில அறிகுறிகளால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அப்போது பாசிட்டிவ் என தெரிய வந்ததால் வீட்டிலேயே என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்.இந்த நோயுடனான எனது போராட்டம் மிகவும் எளிது தான் . ஆனால், கடந்த 21 நாட்களாக நான் தனிமையில் இருந்தது தன மிகவும் சவாலாக இருந்தது.
கொரோனாவிலிருந்து விடுபட்டு மீண்டும் என் குடும்பத்துடன்இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அரக்கனை எதிர்த்து போராட முன்னதாகவே பரிசோதனை செய்துகொள்வது தான் ஒரே வழி.ஆரோக்கியமான உணவுகாலை எடுத்துக்கொள்ளுங்கள்.உங்களை எப்போதும் பிட்டாக வைத்துக்கொள்வதும் தான் இதிலிருந்து விடுபட ஒரே வழி”. இவ்வாறு நடிகை ஜெனிலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.