பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 45.கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் ‘ஜெமினி’, ‘மழை’, ‘வேல்’, ‘ஆறு’ ‘பாபநாசம்’உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தேசிய விருது, கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
சமீப காலமாக நுரையீரல் மற்றும் கிட்னி பிரச்சனை காரணமாக அவதிபட்டு வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், உடல்நிலை மோசமாகி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று திடீரென்று சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணியளவில் கலாபவன் மணி மரணம் அடைந்தார்.