கன்னடத் திரையுலகை போதைப்பொருள் விவகாரம் ஆட்டி படைத்து வரும் நிலையில், தமிழில் போர்க்களம், கதை, மார்க்கண்டேயன், சித்திரம் பேசுதடி 2 உள்பட சில படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகை நிவேதிதா, கஞ்சா செடியை துளசி செடிக்கு நிகராக ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இது குறித்து நடிகை நடிகை நிவேதிதா, ‘தடை செய்யப்படுவதற்கு முன், பல்வேறு சிகிச்சைகளுக்கு துளசி செடியைப்போல, கஞ்சாவைப் பயன்படுத்தி வந்தனர் என்றும், . கஞ்சாவை தடை செய்ததற்குப் பின்னால் சதி இருப்பதாகவும், சுமார் 40 நாடுகளில் இதைப் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தி வருவதாகவும்,அதனால் இங்கும் சட்டப்பூர்வமாக்க வேண்டும்’ என்றும், சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார் என்கிறார்கள்.
கஞ்சாவுடன் துளசியை ஒப்பிட்டு, இதன் மூலம் மத உணர்வுகளை நிவேதிதா புண்படுத்திவிட்டதாகவும் கூறி, அவர் மீது மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறது சாண்டல்வுட் வட்டாரம்.