வெறித்தனமான விஜய் ரசிகர்களால் வெளிப்படையாக ‘தெறி’ டீசர் இணையதள டுவிட்டர், பேஸ்புக் எனத் தறிக்கெட்டு இலட்சக்கணக்கில் ஷேர் பண்ணிக் கொண்டிருக்க,இன்னொரு புறம் விஜய்க்கு போன் செய்து, “படம் எப்போ வரும் தலைவா?’ என்ற ரசிகர்களின் குரல்கள் மட்டும் ஓயவேயில்லையாம்! இதைக்கண்டு தயாரிப்பாளர் தாணுவும்,இயக்குனர் அட்லீயும், மே 1ந் தேதியே கூட தெறிக்க விட்டுறலாமா? என விஜய்யைக் கேட்க,விஜய்யோ,’படத்துல நான் கதைக்கு தொடர்பாக எதையாவது பேசியிருப்பேன் . ஆனா கேட்கிறவங்களுக்கு வேற மாதிரி தோணும். எதையாவது கிளப்பி விட்டுருவாங்க. இந்த பிரச்சனைகள் எதற்கும் இடம் கொடுக்க வேண்டாம். படத்தை நிதானமா தேர்தல் முடிவுக்கு பிறகு வரவழைச்சுக்கலாம்” என்றவர் ,தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை வரவழைத்து, தேர்தல் நிலவரம் குறித்து கருத்துகளை கவனமாக கேட்டவர், ஆளுங் கட்சி சார்பில் தனக்கு ஏற்பட்ட இடைஞ்சல்களை விலாவாரியாக கூறியவர், வெளிப்படையாக எந்த கட்சிக்கும் யாருக்கும் ஆதரவு கொடுக்க வேண்டாம் என்றும் நிர்வாகிகள் தன் மக்கள் இயக்கத்தை எந்த கட்சிக்கும் ஆதரவாக பயன்படுத்த கூடாது என அறிவித்தவர் ,கேப்டன் எடுக்கும் கூட்டணி முடிவுக்கு பின் அவர் சார்ந்த கூட்டணிக்கு மறைமுக ஆதரவு கொடுப்போம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக யாரும் எந்த செயலிலும் இறங்கக்கூடாது எனக் கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்துள்ளாராம்