கங்கனா ரனாவத்தால் விமான பயணிகளுக்கு ஆப்பு!

 

சமீபத்தில் நடிகை கங்கனா ரணாவத் சண்டிகரில் இருந்து தனியார் விமானத்தில் மும்பை வந்தார். விமானப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட கங்கனா ரனாவத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், “விதிமுறைகளை மீறி யாரேனும் விமானத்திற்குள் புகைப்படம், வீடியோ எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த விமானம், அந்த குறிப்பிட்ட வழித்தடத்தில் இரு வாரங்கள் பறக்க தடை விதிக்கப்படும்.விமான விதி 1937, விதி 13ன் யின் கீழ் விமானத்தில் பயணிக்கும் எந்த பயணியும் விமானத்திற்குள் புகைப்படம் எடுக்கக்கூடாது.” என்று கூறப்பட்டுள்ளது.இதனால் விமானத்திற்குள் இனி எந்த பயணியும் செல்பி கூட எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.இந்த உத்தரவின் படி,விமானத்துக்குள் இருந்து யாராவது  ஒரு பயணி புகைப்படம் எடுத்தாலும், அவர் மீது விமானநிறுவனங்கள் விமான விதிமுறைகளின் படி,  அந்த பயணியை குறிப்பிட்ட காலத்துக்கு  விமானத்தில் பறக்க  தடை விதிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.