கடாரம் கொண்டான் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், அஜய் ஞானமுத்து.இயக்கத்தில் உருவா கி வரும் கோப்ரா, மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ஆர்.எஸ். விமல் இயக்கும் மஹாவீர் கர்ணா, கவுதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் ஆகிய இரு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளன. இந்நிலையில்,சுப்புராஜ் இயக்கத்தில்,நடிகர் விக்ரம் நடிக்கும் ‘விக்ரம் 60’ படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதும், இதில் விக்ரம் வில்லனாகவும், துருவ் விக்ரம் நாயகனாகவும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்கிறார்கள். இந்நிலையில் இப்படத்துக்காக உடலை முறுக்கேற்றி வரும் துருவ்விக்ரமின் புதிய கெட்டப் புகைப்படம் ஓன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு படத்தின் கேரக்டருக்காக தன்னை அந்த கேரக்டராகவே மாற்றி கொள்ழும் விக்ரம் போலவே அவரது மகன் துருவ் விக்ரமும் ‘விக்ரம் 60’படத்திற்கு உடலளவில் தயாராகியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்,நடிகைகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளனர்.