இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ராஜாராணி பட த்தின் மூலம்இயக்குனராக அறிமுகமானவருக்கு காப்பி இயக்குனர் என்ற பெயர் கிடைத்தாலும் கூட அப்படம் பலராலும் வரவேற்கப்பட்டது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான தெறி ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய மூன்று படங்களுமே பெரிய வெற்றியை குவித்ததாள் அனைவராலும் கவனிக்கப்படும் நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை பெற்றார். சம்பளமும் அதிரடியாக கோடிகளில் உயர்ந்தது.இந்நிலையில், பாலிவுட் பாஷா என அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானுடன் அட்லி இணையவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தகவலாகவே இருந்து வந்த நிலையில், தற்போது முடிவுக்கு வந்துள்ளது.ஒரு வழியாக ஷாருக்கான் நடிக்கும் பட த்தை அட்லீ இயக்குவது உறுதியாகி அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ‘சங்கி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப் படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார் என்கிறார்கள்.
சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் படங்களுக்கு பிறகு ஷாருக்கான் – தீபிகா படுகோன் ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான் ‘ரா’ ஏஜெண்டாக நடிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் நடத்தப்பட் உள்ளதாம்.












