கடந்த பிப்ரவரி மாதம் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வந்த நிலையில், விஜய் வீட்டில் விடிய விடிய நடந்த வருமானவரித்துறையினரின் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இவ்விவகாரத்தல் கொதித்தெழுந்த விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக படப் பிடிப்பு நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கில் குவியத் தொடங்கினர் .
ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வந்த ரசிகர் கூட்டத்தினரை ஊக்குவிக்கும் வகையில், படபிடிப்பினை முடித்த நடிகர் விஜய் அங்கிருக்கும் பேருந்து ஒன்றில் ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார் .
அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தற்போது இந்திய அளவில் பலராலும் பகிரப்பட்ட ட்விட்டர் பதிவாக அது அமைந்துள்ளது. இதற்கு முன்பு ஷாருக்கானின் புகைப்படம் தான் அதிக அளவில் பகிரப்பட்டதாக இருந்தது. அதனை பின்னுக்கு தள்ளியது தளபதி விஜய்யின் இந்த க்யூட் செல்ஃபி. #INDIAsMostRTedVIJAYSelfie என்ற ஹேஷ்டேக்கில் தளபதி விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.
—