கலைப்புலி எஸ்.தாணுவின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது . மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்துதருமாறு உத்தரவிட்டது .
இந்நிலையில் ‘சூரரை போற்று’ திரைப்படம் ‘ OTT’ மூலமாக வெளியாகும் நிலையில், நடிகர் சூர்யா, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ரூ.30 லட்சம் நன்கொடையாக வழங்கினார் . அந்த தொகையை தற்போது பட அதிபர்கள் கே ஆர் , கே.முரளிதரன் , கே.ஜே. ஆர்.ராஜேஷ் ஆகியோர் தலைமையில், நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது . தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில், சூர்யா தந்த இந்த தொகையின் மூலம் 1,300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள் . சூர்யா அவர்களுக்கு நன்றி என நீதிபதி தெரிவித்துள்ளார்.
—