” நம்ம வீட்டு பிள்ளை” பட த்தைத்தொடர்ந்து,சிவகார்த்திகேயன் தனது நண்பரும் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் “டாக்டர் ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.முடிவடையும் தருவாயில் உள்ள இப்படத்தை தொடர்ந்து,”இன்று நேற்று நாளை” திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமாரின் அறிவியல் திரில்லர் திரைப்படமான ” அயலான்” படத்தில் நடிக்கிறார்.
இப்படங்களைத் தொடர்ந்து லைகா படநிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில்,இயக்குனர் அட்லீயின் உதவியாளர் “சிபி சக்கரவர்த்தி”என்பவரது படத்தில் நடிக்கஉள்ளாராம் . லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் கலந்த அதிரடி நகைச்சுவை திரைப்படமாக உருவா க உள்ளது என்கிறார்கள்.