பாடகர் எஸ்.பிபி. உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்! கமல் மருத்துவமனை விரைந்தார் !!

கொரோனா  தொற்று  காரணமாக பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி  சென்னையில் உள்ள தனியார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு  எக்மோ  மற்றும் செயற்கை சுவாச கருவிகள் பொருத்த ப்பட்டு தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து அவரது உடல் நிலையில்  மெதுவான  முன்னேற்றம் ஏற்பட்டு  வருவதாக அவரது மகன் சரண் தெரிவித்தார். மேலும்,எஸ்பிபி  சைகையில் பேசுவதாகவும், எழுதி காட்டுவதாகவும் அவர்  வீடியோ பதிவில் கூறியிருந்தார்.இந்த நிலையில் எஸ்பிபிக்கு கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கொரோனா நெகட்டிவ் என வந்துவிட்டதாகவும்  அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் எம்.ஜி.எம் மருத்துவமனை தற்போது அவசர அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர்.அதில்கூறப்பட்டுள்ளதாவது, “கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் எக்மோ சிகிச்சை மற்றும் உயிர்காப்பு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி வருகிறது, எனவே மேலும் அவருக்கு அதீத உயிர்காப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை அதிகாரிகள் அவரது உடல்நிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் ” இவ்வாறு அந்த அவசர அறிக்கையில் கூறியுள்ளனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேரில் சென்று எஸ்பிபி உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.