“படிப்பு மண்டையில ஏறலியா ,போயி நாலஞ்சு எருமை மாட்டை மேயி ” என்று வாத்தியார்கள் சில மாணவர்களை கண்டிப்பது உண்டு.
அதைப்போல சினிமாவில் வாய்ப்பு இல்லையா .”எருமை மாட்டுப்பண்ணை வையி .!பொழப்பு நல்லா ஓடும்”என்கிற நடை முறை வாழ்க்கைக்கு வந்தவர் மலையாள நடிகை மஞ்சு பிள்ளை. இவரும் கணவரும் சேர்ந்து எருமைப்பண்ணை வைத்திருக்கிறார்கள்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி, மக்களை தொடர்ந்து உயிர்ப் பலி வாங்கி வருகிறது.
எதிர்பாராத பலரது மரணங்கள் மக்களை நிலைகுலையச் செய்து வருகிறது
.மேலும், கடந்த மார்ச் மாதம் முதல் அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அனைத்து தொழில்களும் மிகவும் பாதிப்படைந்து இருக்கிறது.
தற்போது மத்திய, மாநில அரசுகளால் கட்டுப்பாடு தளர்வுகள் அரசால் கொடுக்கப்பட்டு வந்தாலும் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாததால் சினிமா, மற்றும் சின்னத்திரை வட்டாரம் மிகவும் பாதித்துள்ளது.
காரணம் படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பரவுவதால் படப்பிடிப்புக்கு வர பல நடிகர் நடிகைகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால் சில நடிகர் நடிகைகள்,மாற்றுத் தொழிலில் இறங்கியதும் செய்திகளாக வெளிவந்தன
இந்நிலையில் மலையாள படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து வந்த நடிகை மஞ்சு பிள்ளை என்பவர்,பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது எருமை மாடு வளர்க்கும் தொழிலில் இறங்கியுள்ளார்.சுஜித் வாசுதேவ் என்கிற ஒளிப்பதிவாளரை திருமணம் செய்துகொண்டுள்ள மஞ்சுபிள்ளை, கணவர் கொடுத்த ஆலோசனையின் பேரில், 50 எருமை மாடுகளை வாங்கி திருவனந்தபுரம் அட்டிங்கல்லில் பண்ணை வைத்துள்ளார் . மாடு மேய்ப்பது, தொழுவத்தில் கட்டுவது போன்ற என புகைப்படங்களை மஞ்சுப்பிள்ளை தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது கேரள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.