வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது இதற்கிடையே சிம்பு, கிடைத்த சின்ன இடைவெளியில், சுசீந்திரன் இயக்கத்தில் குறுகிய கால தயாரிப்பாக இன்னும் பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரைதிண்டுக்கல் அருகேயுள்ள வாடிபட்டியில் தொடங்கியுள்ளது.
இதில் சிம்பு நாளை முதல் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் நேற்று வேட்டி சட்டை அணிந்து கொண்டு, முகத்தில் மாஸ்க்குடன் சென்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்தவர, இன்று சுசீந்திரன் படப்பிடிப்புக்காக மதுரைக்கு சென்றவர் அங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.