மாஸ்டர் படத்தை தொடர்ந்து அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிக்கும் 232 வது படத்தை இயக்குகிறார். ராஜ்கமல் நிறுவனம் இயக்கும் இப் படத்தின் அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிடும் போது, ‘எவனென்று நினைத்தாய்’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி போஸ்டர் வெளியிட்டார். இதயடுத்து இப்படத்தின் தலைப்பு ,’எவனென்று நினைத்தாய்’ என்றே பலரும் நினைத்தனர். ஆனால் அது வெறும் ஹேஷ்டேக் தான் என்றும், படத்தின் டைட்டில் அது அல்ல என்றும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இப்பட த்துக்கு ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு கமல் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ‘குரு’ படத்தின் தலைப்பையே சூட்ட திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. ஆனால் படத்தலைப்பு குறித்து அதிகார பூர்வமாக கமல் தனது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவிப்பார் என்கிறார்கள். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதை சந்தோஷ் சிவன் இயக்குகிறார். ஹீரோவாக விக்ராந்த் மாசே நடிக்கிறார்.வரும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.