
அந்த அறிக்கையை படித்து விட்டு வந்த கணத்தின் வெப்பத்தில், எனது டுவிட்டர் பதிவில், ஒரு ‘ட்வீட்’ போட்டு விட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது.
அதற்கு பிறகு நாம் அவசரத்தில் இதைச் செய்திருக்க கூடாது என்று மனம் கூறியது. ஆகவே நான் போட்ட ட்விட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் பாரதிராஜா அவருடைய சாதனைகளில் ஒரு சதவீதமாவது நாம் செய்து விட மாட்டோமா என பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குனர்களுக்கு இயக்குனர் பாரதிராஜா வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இருக்கிறார். எப்போதும் இருப்பார்.
அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினை ஆற்றி இருக்கக்கூடாது. இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள் அனைத்து தரப்பு மக்களும், பார்க்கும் வகையில் இருக்கும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
