
தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புவரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. தற்போது இந்த படத்திற்கான பாடல் பதிவு பணிகள் தொடங்கிவிட்டதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் அவர் இசையமைப்பு பணிகள்குறித்து கார்த்திக் ராஜாவுடன் ஆலோசனை நடத்தி வரும் புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ திரைப்படத்திற்கும் இசையமைத்து வருவதும் விரைவில் இப்படம் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.