தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் நவம்பர் 22 -ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் டி.ராஜேந்தர், முரளி ராம நாராயணன் மற்றும் பி.எல்.தேனப்பன் ஆகியோரது தலைமையிலான மூன்று அணிகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி சார்பில் தலைவர் பதவிக்கு டிராஜேந்தர்,
2 செயலாளர்கள் பதவிக்கு – டி. மன்னன்,என்.சுபாஷ் சந்திரபோஸ் , பொருளாளர் பதவிக்கு கே.ராஜன், 2 துணைத்தலைவர்கள் பதவிக்கு கே.முருகன்,பிடி செல்வகுமார் ஆகியோரும்,21 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ஏ.எம்.ரத்தினம்,எம் மனோபாலா,சக்திசிதம்பரம்,பருத்தி
‘தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணியை’ அறிமுகம் செய்து வைத்த டி.ராஜேந்தர் பேசுகையில், நான் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராகவும் இருப்பதால் அச்சங்கத்தின் விதிமுறைப்படி மற்ற சங்கத்தின் பொறுப்புகளுக்காக போட்டியிடக்கூடாது என்று எதிர்தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால்,இதற்கு செயற்குழுவில் ஏற்கனவே ஒப்புதல் பெற்று விட்டோம். ஒருவேளை பொதுக்குழு கூட்டப்படும் போது ஒப்புதல் கிடைக்காவிட்டால், நான் என் பதவியை ராஜினாமா செய்யவும் தயங்கமாட்டேன்.தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்பு நிதியாக இருந்த ரூ.7 கோடி மாயமாகியுள்ளது. நான் வெற்றி பெற்றால் அந்தத் தொகை என்ன ஆனது என கண்டுபிடிப்பேன் என்றும் தெரிவித்தார்.