சிம்பு நடிப்பில்,சுசீந்திரன் இயக்கியுள்ள புதிய படம் ஈஸ்வரன்.கிராமத்து பின்னணியில் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, அப்துல் காலிக் காக நடித்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பிற்கு பாண்டிசேரி சென்றுவிட்டார். தொடர்ந்து இன்னும் சில நாட்கள் அங்கு மாநாடு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்நிலையில், சிம்பு . கருப்பு சட்டை அணிந்து, தாடியுடன் செம ஸ்டைலாக தண்ணீருக்குள் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.