சமீபத்தில் துபாயில் 2020- ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்தன. இப்போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் விளையாடியவர் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி. அப்போது அவர் அளித்த சில பேட்டிகளில், தான் ஒரு தீவிரமான விஜய் ரசிகர் என்றும்,அவரைச் சந்திக்க ஆசை என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த புகைப்படத்தை வருண் சக்ரவர்த்தி. தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அப்பதிவில், “உள்ளே வந்தா பவரடி.. அண்ணா யாரு? தளபதி” என்று தெரிவித்துள்ளார்.இப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.