நடிகை கவுதமி கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் தனது மகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 4 மணியளவில் மர்மநபர் ஒருவர் கவதமி வீட்டு காம்பவுண்டு சுவர் மீது ஏறி குதித்தார். இதை பார்த்த வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் அந்த நபரை பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்த மர்ம நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்,கொட்டிவாக்கம் மீனவ குப்பத்தை சேர்ந்த 24-வயதான பாண்டியன் என்பது தெரியவந்தது.இதையடுத்து, பாண்டியன்(வயது 24) மீது 380, 511 என்ற இரு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து பின்னர், ஜாமீனில் விடுவித்தனர்.பாண்டியன் என்ற அந்த நபர் பெயிண்டராக வேலை பார்த்து வருவதாகவும், மது போதையில் நிதானத்தை இழந்து தெரியாமல் சுவர் ஏறி குதித்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறியுள்ளனர்