நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் வரும் 30 ந் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வரும் 30ந் தேதி காலை 10 மணியளவில் இக்கூட்டம் நடக்கிறது.
ரஜினிகாந்த் தலைமையில் நடக்க உள்ள இக்கூட்டத்தில் அவரது உடல் நிலை குறித்தும், நடப்பு அரசியல் குறித்தும், தான் அரசியலுக்கு வரும் பட்சத்தில் சந்திக்க வேண்டிய நெருக்கடிகள் பற்றியும் விரிவாக விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.