வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ படத்தைத் தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு,மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படத்தைத் தயாரித்து வருகிறார். இது இறுதிக்கட்டபணியில் உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து கலைப்புலி எஸ்.தாணு,செல்வராகவன்இயக்கத்தி ல் -தனுஷ் இணையும் புதிய படம் ஒன்றையும் தயாரிக்கிறார். தற்போதுஅத்ரங்கி ரே’, ‘கர்ணன்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இந்தப் படங்களை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க வரும் டிசம்பரில் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
இதில் நாயகியாக மாளவிகா மோகனன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.கார்த்திக் நரேன் படத்தை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பை வரும் மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.இயக்குனர் செல்வராகவன் தற்போது சாணிக்காகிதம் பட த்தின் மூலம் கதாநாயகனாகவும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது