திருகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்தார் இசையமைப்பாளர் இளையராஜா.உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் இன்று கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ள இசைஞானி அடிக்கடி சென்று வரும் கோவிலும் அது தான். இந்நிலையில்,இன்று மகா தீபத்தை
யொட்டி திருவண்ணாமலை சென்ற இசைஞானி இளையராஜா மகா தீபத்தையும் ,அண்ணாமலையாரையும் ஒருசேர தரிசித்துள்ளார்.
இளையராஜா திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.