யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கிற உத்தரபிரதேச மாநிலத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
“கட்டாயப்படுத்தியோ, அதர்மமாகவோ , மத மாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதில் திருமணத்தின் பெயரால் மதமாற்றம் செய்வதும் கூடாது . இந்த அவசரச் சட்டத்தின்படி, திருமணத்துக்காக மட்டுமே பெண்கள் மதம் மாறினால் அது செல்லாது. திருமணத்துக்குப் பிறகு மத மாற்றம் செய்து கொள்ள விரும்பினால் மாவட்ட நீதிபதியிடம் அனுமதி வாங்க வேண்டும்”
லவ் ஜிஹாத் ! சுருக்கமாக சொன்னால் காதலுக்கு தடை.!
இந்த அவசர சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு இருந்தாலும் அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. யோகி ஆதித்யநாத்திடம் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மைதான்.!
நடிகர் சித்தார்த் இந்த அவசரசட்டத்தை கடுமையாக எதிர்த்து ஒரு கற்பனை உரையாடலை தன்னுடைய டிவிட்டர் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
“அப்பா, நான் இந்த பையனை காதலிக்கிறேன். அவரை கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறேன்”என்று மகள் அவளுடைய தந்தையிடம் கேட்கிறாள்.
“அவர் நம்முடைய ஜாதியா ம்மா ?”
“இல்லப்பா!”
“பரவாயில்லை .உன்னுடைய காதலை நான் மதிக்கிறேன்.என்னுடைய வாழ்த்துகள். ஆனால் மகளே ,மாவட்ட நீதிபதியிடம் உங்கள் கல்யாணத்துக்கு அனுமதி வாங்க வேண்டும். உபேர் டாக்சியை கூப்பிடு!”என்பதாக அந்த உரையாடல் முடிகிறது.
புதிய இந்தியா!
இதற்கு பிறகுதான் சித்தார்த்தின் கோபம் வெளிப்படுகிறது!
லவ் ஜிஹாத் !
என்ன தைரியம் இருந்தால் வயதுக்கு வந்த மேஜர் பெண் எப்படி அவளது திருமணத்தை பற்றி முடிவு எடுக்கலாம்?
அவர்களது சட்டப்படி எவ்வித சுதந்திரமும் இல்லை.விரும்பியதை சாப்பிடவோ ,விருப்பப்படி பாடவோ ,எழுதவோ ,படிக்கவோ ,விரும்பியவரை கல்யாணம் செய்து கொள்ளவோ சுதந்திரமில்லை. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.” என்பதாக பதிவு செய்திருக்கிறார்.
இவரது டிவீட்டுக்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைத்து வருகிறது.