ஆலியா பட்டுடன் திருமணம் எப்போது? மனம் திறந்த ரன்பீர் கபூர்!.
நம்ம ஊர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி மாதிரி, பாலிவுட்டிலும் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை ஆலியா பட் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர்.
‘எப்ப தான் கல்யாணம் செஞ்சுக்குவீங்க? என ரசிகர்கள் டுவிட் போட்டு சலித்து போன நிலையில்,தற்போது பிரபல விமர்சகர் ராஜீவ் மசாந்த் உடன் நடத்திய கலந்துரையாடலில் ரன்பீர் கபூர் ,ஆலியா பட்டுடனான திருமணம் குறித்து முதல் முறையாக பேசியுள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரன்பீர் கபூரிடம் திருமணம் குறித்த கேள்வி முன் வைக்கப்பட்ட நிலையில், ” நம் வாழ்வில் கொரோனா தோற்று என ஓன்று இல்லாமல் போயிருந்தால் இந்நேரம் எங்களது திருமணம் எப்பவோ நடந்து முடிந்திருக்கும்.ஆனால் நான் இப்போது எதையாவது சொல்லி அதை கெடுக்க விரும்பவில்லை.
நான் என் வாழ்க்கையில் மிக விரைவில் அந்த இலக்கை (திருமணம்) அடையப் போகிறேன். ”என்கிறார் சிரித்துக்கொண்டே .
இந்நிலையில் ரன்பீர் கபூர்-ஆலியா பட் இருவரும் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்த்திரா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.