மீராகி புரடக்சன் பட நிறுவனம் சார்பில் எஸ்.சபரீஷ் குமார் தயாரிக்கும் புதிய படத்துக்கு யாக்கை திரி என்ற கவிநயம் மிக்க தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.இதில்,பரத் கதாநாயகனாக நடிக்க,பிரபல மாடல் சோனாக்ஷி சிங் ராவத்,ஜனனி அய்யர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க இவர்களுடன்,பகவதி பெருமாள்,நிரஞ்சனி,பிரதாப்போத்தன்,பாண்டியராஜன்,சுதாசந்திரன்,ஞான சம்பந்தம் உள்பட பலர் நடிக்கின்றனர்.இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிவரும் பரத் மோகன் கூறியதாவது,”கதையின் நாயகன் பரத் இதில் கம்பெனி ஒன்றில் பணியாற்றிவருகிறார், இவரது மனைவியாக ஜனனி அய்யர் நடிக்கிறார். பரத்துக்கு அவர் பனி புரியும் கம்பெனியில் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்நிலையில்,கொல்கத்தாவில் பிரபல பரதநாட்டியக்கலைஞராக வலம் வரும் பிரபல மாடல் சோனாக்ஷி சிங் ராவத் ஒரு பிரச்சனையில் சிக்கித்தவிக்கிறார்.இந்த இருவரும் எதிர்பாராதவிதமாக சந்தித்து கொள்கின்றனர்.அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் சுவரசியாயமான அழகான காதல் கதையாக்கப்பட்டுள்ளது. இதை ஒரு முக்கோண காதல் கதை என்று கூட சொல்லலாம்.படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. படம் பார்க்கும் போது நீங்களே அதை தெரிந்து கொள்வீர்கள்.இதன் திரைக்கதை சென்னை கொல்கத்தா என இரு இடங்களில் பயணிப்பதால் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 28 நாட்களும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கல்கத்தாவில் 8 நாட்களும் நடத்த உள்ளோம் இது வரை பார்த்திராத கொல்கத்தாவை இப்படத்தில் காணலாம் என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை,பாலு கவனிக்க,அரோல் கரோலி இசையமைத்து வருகிறார்.