நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து இருந்த நிலையில், ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பணியாற்றிய ஊழியர்களுக்கு திரென ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக, உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் உள்பட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர் இதில் ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது என்றாலும் திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு,தொடர்ந்து முழு ஓய்வு எடுக்கவேண்டும் என்றும் அரசியல் உள்ளிட்ட மனஅழுத்தம் தரும் எதிலும் ஈடுபடவேண்ண்டாம் என்றும் மருத்துவர்களின் கண்டிப்பான அறுவுறுத்தலைத் தொடர்ந்து, தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை திரும்பப் பெறுவதாகவும் இதற்காக தன்னை ரசிகர்கள் மன்னிக்கும் படியும் ரஜினிகாந்த் நீண்ட அறிக்கை
வெளியிட்டார்.இது சில ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள சில ரஜினிகாந்த் ரசிகர்கள் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். போராட்டம் நடத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,
”ரஜினி ரசிகர் மன்றத்தினர், மக்கள் மன்றத்தினருக்கு வணக்கம். நமது தலைவர் தன்னுடைய உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் ஆலோசனைகளை மீறி அரசியலுக்கு வந்தால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் மூலம் தன்னை நம்பிவரும் மக்கள் துன்பப்படக்கூடாது என்ற நல்லெண்ணப்படியும்தான் அரசியலுக்கு வரமுடியாத சூழல் குறித்து நம் அன்புத் தலைவர் வெளிப்படையான தெளிவான அறிக்கை ஒன்றைக் கொடுத்திருந்தார்.
அதன் பின்னரும் அவரை அரசியலில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடச்சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடப் போவதாக சில ரசிகர்கள் பேசிவருவது அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயல். இந்தப் போராட்டத்திற்காக ஒரு சிலர் அதற்கான செலவுக்கென்று கூறி நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது.
நம் தலைவரின் மீது அன்பும் அவர் நலனில் அக்கறையும் கொண்ட நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்களும் ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்”.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்